பாப் இசைப் பாடகர் ஜஸ்டின் பீபர் பகிர்ந்த அசல் புகைப்படம்!

Report

ராட்சத திமிங்கல சுறா ஒன்று படகுக்குக் கீழ் இருப்பது போன்ற போட்டோவைப் பகிர்ந்த பாப் இசைப் பாடகர் ஜஸ்டின் பீபர் அது உண்மையான புகைப்படம் என கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்த புகைப்படத்தில் படகுக்கு அடியில் நீந்தி வரும் திமிங்கலச் சுறா, அதையறியாமல் படகின் மீது அனாயசமாக நிற்கும் ஆட்களின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இது உலகிலேயே மிகப்பெரிய கடல் வாழ் உயிரினமான திமிங்கலச் சுறா என ஜஸ்டின் பீபர் குறிப்பிட்டுள்ளதோடு அதை அசலான புகைப்படம் என்றும் கூறியுள்ளார்.

உண்மையில் இது 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நிங்கலூ ரீஃப் கடற்பகுதியில் எடுக்கப்பட்டது என்றும், Forced perception எனும் பெயரில் புகைப்படம் எடுத்த கோணத்தில் அழுத்தம் கொடுத்து எடுக்கும் தொழில்நுட்பத்தை புகைப்படக் கலைஞர் டாம் கேன்னன் எடுத்துள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் படகு ஒரு இடத்திலும், திமிங்கல சுறா ஒரு இடத்திலும் இருந்ததாகவும், படகு தொலைவில் இருக்க, சுறா கேமராவுக்கு அருகில் இருந்ததாகவும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1025 total views