சீனாவில் ஹெலிகாப்டர் கண்காட்சி கோலாகலம்!

Report

சீனாவில், 5வது முறையாக ஹெலிகாப்டர் கண்காட்சி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

அந்நாட்டின் வடக்கு துறைமுக நகரமான டியான்ஜின்னில் வர்த்தக ரீதியிலான ஹெலிகாப்டர் கண்காட்சி தொடங்கியுள்ளது.

இதில் 18 நாடுகளை சேர்ந்த 415 வர்த்தகர்கள் பங்கேற்று 56 ஹெல்காப்டர்களை காட்சிப்படுத்தியுள்ளனர். மாநில கவுன்சிலின் அனுமதியுடன் நடைபெறும் இந்த கண்காட்சியில், சீனா முதன்முறையாக தனது Z-20 என்ற ராணுவ ஹெலிகாப்டரை காட்சிப்படுத்தியுள்ளது.

முன்னதாக, தொடக்க நிகழ்ச்சியின் போது சீனாவின் ராணுவ ஹெலிகாப்டர் உள்பட சுமார் 27 ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து வர்ணஜாலங்கள் புரிந்தன.

Flyby wire உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட Z-20 என்ற ராணுவ ஹெலிகாப்டரை சீனா கடந்த அக்டோபர் 1ம் தேதி சீனாவின் தேசிய தின நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

945 total views