தன்னந்தனியாக கடல் பயணம் மேற்கொண்ட பென்குவின்!

Report

தன்னந்தனியாக 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் நீந்தி வந்து மெலிந்து போன பென்குவின், சிகிச்சைக்குப் பின் மீண்டும் கடலில் விடப்பட்டது.

நியூசிலாந்தின் டாம்மானிய கடற்கரையைக் கடந்து கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீந்தி ஆஸ்திரேலியா வந்த ஃபியோர்லேண்ட் பெங்குயின் என்ன காரணத்துக்காக வந்தது என தெரியவில்லை என அதனை மீட்ட மெல்பர்ன் வன உயிர் பூங்கா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மீட்கும் போது உடல் மெலிந்து, சோர்ந்து முற்றிலும் சக்தியே இன்றி காணப்பட்டதாகவும் ஜூலை 10-ம் தேதி முதல் ஆகஸ்ட் 2 வரை அதற்கு மருத்துவப் பரிசோதனைகளோடு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

பின்னர், ஃபிலிப் தீவில் இருந்து மீண்டும் கடலுக்குள் அந்த பெங்குயின் விடுவிக்கப்பட்டது. மீண்டும் நீண்ட தூரம் கடல் பயணம் மேற்கொள்ள நேர்ந்தாலும் அது அதன் கூட்டத்தை அடையும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

1347 total views