மனிதர்களை போன்று கிளிகளுக்கும் இந்த தன்மை இருக்கு!

Report

மனிதர்களை போன்று கிளிகளுக்கும் இயற்கையிலேயே இசையை கேட்டால் நடனமாடும் தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆராய்ச்சியாளரினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இசைக்கு ஏற்ப கிளி 14 விதமான நடனங்களை தானாக கற்றுக்கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஸ்நோபால் கிளி போல், சில வகை பறவைகளும் அதி நவீன அறிவாற்றல் மற்றும் படைப்பாற்றல் திறன் கொண்டவை என கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த ஐரினா ஸ்கல்ஸ் என்பவர் வளர்த்து வரும் ஸ்நோபால் என்ற வெள்ளை நிற கிளி, தலையை அசைத்தும், கால்களை தட்டியும் Backstreet Boys குழுவின் Everybody பாடலுக்கு நடனமாடிய காட்சிகள் கடந்த 2007ம் ஆண்டு சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதனைத் தொடர்ந்தே, அமெரிக்கா ஆராய்ச்சியாளர்களினால் இது குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

1298 total views