திரும்பி வந்த உலக புகழ்பெற்ற மோனலிசா ஓவியம்!

Report

உலக புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் இருந்த இடத்தின் இரண்டு மாத புனரமைப்பு பணிக்கு பிறகு லூவர் அருங்காட்சியகத்தில் அது மீண்டும் காட்சிக்கு வைக்கப்பட்டது

1503 முதல் 1506ம் காலக்கட்டத்தில் டா வின்சியால் வரையப்பட்ட மோனலிசா ஓவியம் உலகப்புகழ்பெற்றது.

பாரிசில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மோனலிசா ஓவியத்தை வந்து பார்வையிடும் சுற்றுலாப்பயணிகள் அதனுடன் இணைந்து இருப்பது போன்று புகைப்படம் எடுத்து சென்றனர்.

அதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்கும் விதமாக மோனலிசா ஓவியம் இருந்த இடத்தை புனரமைக்க திட்டமிட்டு கடந்த ஜூலை 16ம் தேதி ஓவியம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.

கிட்டத்தட்ட இரண்டுமாத புனரமைப்பு பணிகள் அறையில் முடிவடைந்த பிறகு மோனலிசா ஓவியம் மீண்டும் தனது பழைய இடத்திலேயே காட்சிக்கு வைக்கப்பட்டது.

இதனையறிந்து அருங்காட்சியகத்திற்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் மோனலிசாவுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அக்டோபர் மாதம் டா வின்சியின் 500வது நினைவு நாள் அனுசரிக்கப்படுவதை ஒட்டி தயாராகி வரும் லூவர் அருங்காட்சியகம் மோனலிசா ஓவியத்தை சிறப்பித்து காண்பிக்க உள்ளது.

4382 total views