அதிகரிக்கும் பல்கலைக்கழக பாலியல் சுரண்டல்- தடுப்பதற்கு புதிய சட்டம்!

Report

பல்கலைக்கழக மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதைத் தடுக்கும் முகமாக நைஜீரியாவில் சட்டமூலம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் கானாவில் சில பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது மாணவிகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்துவது குறித்து அதிகளவில் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

இதனை அடுத்து, அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து பி.பி.சி. ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டதை அடுத்தே இந்த சட்டமூலம் நைஜீரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தினை கொண்டு வருவதில் பி.பி.சி.யின் விசாரணையும் தங்களுக்கு பெரும் உந்து சக்தியாக அமைந்திருந்தாக நைஜீரிய செனட் சபையின் பிரதித்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பது, ஒரு தந்தையாக தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம் என நைஜீரிய செனட்டர் ஒமோ அகேகே தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டமூலம் சட்டமாக்கப்படும் பட்சத்தில் தமது மாணவர்களை விரிவுரையாளர்கள் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்துவது நைஜீரியாவில் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டமூலம் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில், நைஜீரியாவில் தங்கள் மாணவிகள் மீது பாலியல் சேட்டை விடும் கல்வி சார் ஊழியர்கள் 14 வருடங்கள் வரை சிறைத்தண்டனையை எதிர்நோக்க நேரிடும் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.

1195 total views