பெண் அரசியல்வாதியை காலால் மிதிக்கும் துருக்கி ஆயுதக்குழு! வெளியான பதை.. பதைக்கும் வீடியோ

Report

குர்திஸ் பெண் அரசியல்வாதியொருவரை துருக்கி படையினருடன் இணைந்து செயற்படும் ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொலை செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அதில் குர்திஸ் ஆதரவு எதிர்கால சிரிய கட்சியின் செயலாளர் நாயகம் ஹெவ்ரின் கலாபின் குண்டு துளைக்கப்பட்ட வாகனத்தையும் அதற்கு அருகில் இராணுவசீருடையுடன் பலர் காணப்படுகின்றனர்.

இன்னொரு வீடியோவில் கெவ்ரின் கலாவ் என கருதப்படும் பெண் ஒருவர் இடிபாடுகளிற்கு இடையில் சடலமாக காணப்படுவதையும் காணமுடிகின்றது.

அவரது உடலிற்கு மேல் நின்றுகொண்டு அதனை நபர் ஒருவர் படம்பிடிப்பதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.

குறித்த வீடியோவில் காணப்படும் வாகனம் கெவ்ரின் கலாவ்பினுடையது என்பதை உள்ளுர் ஊடகவியலாளர் ஒருவர் உறுதிசெய்துள்ளார்.

இதேவேளை சிரிய ஜனநாயக பேரவை கெவ்ரின் கலாவ்வினை துருக்கி இராணுவத்தினருடன் இணைந்து செயற்படும் ஆயதக்குழுக்களே கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் துருக்கி ஆதரவு ஆயுதகுழுவினர் தாக்குதலின் போது அவரை காரிலிருந்து வெளியே இழுத்துக்கொலை செய்ததோடு அவரது வாகனச்சாரதியையும் கொலை செய்ததாக சிரிய ஜனநாயக பேரவை தெரிவித்துள்ளது.

இதேவேளை வடசிரியாவில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடக்கும் இனந்தெரியாத நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதோடு கூச்சலிடுவதையும் அவதனிக்க முடிகின்றது.

17136 total views