பட்டாம்பூச்சியின் இறக்கையை வெட்டிய பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

Report

அமெரிக்காவில் சிறகு பழுதானதால் பறக்க முடியாமல் தவித்த பட்டாம்பூச்சிக்கு புதிய இறக்கையை வழங்கிய பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கான்சாஸ் நகரத்தைச் சேர்ந்தவர் கட்டி வேன்பெலாரிகம் இவர் அப்பகுதியில் பறக்க முடியாமல் தவித்த பட்டாம் பூச்சியைக் கண்டார்.

பின்னர், அதனைப் பிடித்து பழுதான இறக்கையை வெட்டி அகற்றினார் கட்டி. இறந்துபோன மற்றொரு பட்டாம்பூச்சியின் இறக்கையை எடுத்து இந்தப் பூச்சியின் இறக்கையுடன் ஒட்டினார்.

பசை காய்ந்த உடன் அந்தப் பூச்சி உற்சாகமாக சிறகடித்து உல்லாசமாக பறக்கத் தொடங்கியது. கட்டியின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

3272 total views