பாகிஸ்தானை சாம்பல் நிற பட்டியலில் இருந்து நீக்க வாய்ப்பு!

Report

பாரீசில் நடைபெறும் சர்வதேச நிதி கண்காணிப்பு கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் விதிக்கப்பட்டுள்ள சாம்பல் நிற பட்டியலில் இருந்து அந்நாடு அடர் சாம்பல் நிறப் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது.

அடர் நீலம் என்பது பாகிஸ்தானுக்கு நிலைமையில் முன்னேற்றம் காண்பதற்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும். இதனால், பாகிஸ்தானுக்கு உலக வங்கி, ஐ.எம்.எப். ஐரோப்பிய யூனியன் போன்றவை நிதியளிக்க மறுக்கலாம்.

இதையடுத்து, கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டால் அதற்கு சர்வதேச அளவில் நிதி பெற முடியாத நெருக்கடி உருவாகும்.

தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தீவிரவாதிகளை கைது செய்யவும் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய நிதி ஆதாரங்களைத் தடுக்கவும் பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கைகள் குறித்து நிதி கண்காணிப்பகம் பரிசீலனை செய்து வருகிறது.

மொத்தமுள்ள 27 அம்சங்களில் பாகிஸ்தான் 6 அம்சங்களில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிராக போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாகிஸ்தான் குறித்து அனைத்து உறுப்பினர்களும் அதிருப்தி கொண்டிருப்பதால் பாகிஸ்தான் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது.

779 total views