கலாச்சார விழிப்புணர்வை ஏற்படுத்த காபி ஷாப் நடத்தி வரும் சிற்பி!

Report

எகிப்தில், கலாச்சார விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தொழிலதிபரும் சிற்பியுமான ஒருவர், சிற்பங்களுடன் கூடிய காப்பி ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார்.

அலெக்சாண்ட்ரியா நகரில் 'Tamr Henna Museum" என பெயருடன் செயல்படும் இந்த காப்பி ஷாப்பில், உரிமையாளர் ஷெர்பினி 70க்கு மேற்பட்ட பல வினோத சிற்பங்களை வடிவமைத்துள்ளார்.

கடைக்கு வருவோருக்கு அரசியல் மற்றும் தத்துவ கருத்துக்களை வழங்கி வரும் ஷெர்பினி, ‘தீவிரவாதத்துக்கு மதம் என்பதே கிடையாது என்பதை எடுத்துரைக்கிறார்.

மேலும், கடையில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘Adel’ என்ற சிற்பம் குறித்து விளக்கும் அவர், Adel பல்வேறு சிந்தனைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு அப்பாவி மக்களை ஒடுக்கியவர் எனவும், அவரது தலை மற்றும் கையில் உள்ள ரத்தம் அப்பாவி மக்கள் ஒடுக்கப்பட்டதை குறிப்பதாகவும் அவர் கூறினார்.

881 total views