உலக உணவு தினம்!

Report

உலகில் யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்ற தொனிப்பொருளில் வருடந்தோறும் ஒக்ரோபர் 16 ஆம் திகதி உலக உணவு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த வருடத்தின் தொனிப்பொருள் நம் செயல்களே நம் எதிர்காலம் என்பதாகும். இந்த கொள்கையின் மூலம் தான் உலகில் அனைவருக்கும் உணவு வழங்கமுடியும் என்று எடுத்துரைக்கப்பட்டது.

உண்ணும் உணவு போஷாக்கானதாக இருக்கவேண்டும் என்றும், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடாது என்றும் ஐக்கிய நாடுகளின் உணவு வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்களைக் கைவிட்டு உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகளை உட்கொள்ளவும் அந்த அமைப்பு வலியுறுத்தல் விடுத்துள்ளது.

ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் கொண்டவர்கள் பல நோய்களால் பாதிக்கப்படலாம் என்றும், பழங்கள், காய்கறிகள், பருப்புவகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இயன்றளவு வீட்டில் உணவுகளைச் சமைக்கலாம் என்றும், உணவை வீணடிக்க வேண்டாம் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

720 total views