சீனக் கப்பல்கள் மீது அமெரிக்கா கடும் குற்றச்சாட்டு!

Report

கடல்வழி தகவல் தொடர்புகளை கண்டறியும் அமைப்புகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு, சீனக் கப்பல்கள், ஈரானின் கச்சா எண்ணெயை ரகசியமாக எடுத்துச் செல்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துக்கும் அணு ஏவுகணைத் திட்டத்துக்கும் முட்டுக்கட்டை போடும் விதத்தில், அந்நாட்டின் மீது அமெரிக்கா கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இந்த நிலையில், ஈரான் கச்சா எண்ணெயை சீனக் கப்பல்கள் ரகசியமாக எடுத்துச் செல்வதாகக் கூறி, அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது .

இரண்டு சீனக் கப்பல்கள் ஈரான் எண்ணெயை ரகசியமாக ஈராக் வழியாக எடுத்துச்சென்றிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

தனது திருட்டுத்தனத்தை மறைக்க சீனக் கப்பல்கள், கடல்வழி தகவல் தொடர்புகளை கண்டறியும் அமைப்புகளிடம் சிக்காதவாறு தங்கள் கப்பலின் தொழில் நுட்பங்களை மறைத்துக் கொண்டு செல்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது மிகவும் அபாயகரமான, பொறுப்பற்ற நடவடிக்கை என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதனால், சீனா - அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தகப் போர் வெடிக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

1105 total views