ஆப்கானிஸ்தான் கார் குண்டு தாக்குதல் – 3 பேருக்கு நேர்ந்த கதி!

Report

ஆப்கானிஸ்தானில் பொலிஸ் நிலையம் அருகே இன்று இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

லஹ்மேன் மாகாணத்தின் அலிஷிங் மாவட்டத்தில் இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவத்தில் மேலும், 43 பேர் படுகாயமடைந்தனர்.

தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தலிபான்கள் சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ளதுடன், போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் உள்நாட்டு படைகளும், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளும் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், பயங்கரவாத குழுக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்புகளும் தற்போது வரை பொறுப்பேற்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

661 total views