சிரியாவில் துருக்கி இராணுவம் தாக்குதல்! 595 பேர் பலி

Report

சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது துருக்கி இராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 595 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மக்களை குர்திஷ் மக்கள் பாதுகாப்புப் படை என்ற போராளிகள் அமைப்பு பாதுகாத்து வருகிறது.

இந்த போராளிகள் குழு தனி நாடு அமைக்கும் நோக்கில் சிரியாவில் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சி என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்நாட்டின் எல்லையில் இருந்து துருக்கி மீது இடைக்கிடையே தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த தனி நாடு கோரிக்கையை நிராகரிக்கும் துருக்கி ஜனாதிபதி, தங்கள் நாட்டிலும் சிரியாவிலும் செயல்பட்டு வரும் குர்திஷ் போராளிகளை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், சிரியாவின் வடக்கு பகுதியில் கடந்த 9 ஆம் திகதி முதல் ஒரு வாரம் நடத்திய தாக்குதலில் இதுவரை 595 குர்திஷ் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

6545 total views