வேலியை தாண்டி சிங்கத்திடம் நெருங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி! திகில் காணொளி

Report

இந்தியாவில் உள்ள டெல்லி உயிரியல் பூங்காவின் பிரமாண்ட சுவரில் ஏறிக் குதித்து இளைஞர் ஒருவர் சிங்கத்தை பார்க்க வந்துள்ளார். சிங்கத்துடன் மிக நெருக்கமாக இருக்கும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லி உயிரியல் பூங்காவில் வினோத சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இங்கு சிங்கம் அடைக்கப்பட்டிருக்கும் பிரிவுக்குள் வந்த இளைஞர் ஒருவர், சிங்கத்துடன் பேச முயன்றார்.

அவருக்கும் சிங்கத்திற்கு சில அடி தூரம்தான் இருக்கும். சிங்கத்தை பார்த்த அந்த இளைஞர் சிறிது நேரத்திற்கு அதனுடன் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்.

கொஞ்ச நேரம் பொறுத்திருந்த சிங்கம், பின்னர் அவரை நோக்கி கோபமுகத்துடன் செல்லத் தொடங்கியது. இதனால், பின்னோக்கி அந்த இளைஞர் சென்றார்.

இந்த காட்சிகளால் அதிர்ச்சி அடைந்த உயிரியல் பூங்கா காவலர்கள், மதி நுட்பத்துடன் செயல்பட்டு சிங்கத்திடம் இருந்து இளைஞரை லாவகமாக மீட்டெடுத்தனர். அவர் யார், எதற்காக இந்த விஷப் பரிட்சையில் இறங்கினார் என்பது குறித்த விவரம் தெரிய வரவில்லை.

1722 total views