தண்டவாளத்தில் சிக்கிய நபரை நூலிழையில் காப்பாறிய நபர்!

Report

அமெரிக்காவில் ரயில் தண்டவாளம் மீது நிறுத்தப்பட்ட காரில் இருந்த ஓட்டுநரை ரயில் வரும்போது கண்ணிமைக்கும் நேரத்தில் ஒருவர் காப்பாற்றிய சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள உதாஹ் பகுதியில், ரயில்வே தண்டவாளத்தின் மீது இருட்டில் விளக்குகளை எரிந்த படி கார் ஒன்று நின்றுக் கொண்டிருந்ததை அந்த வழியாக காரில் வந்த மற்றொரு நபர் பார்த்துள்ளார்.

அப்போது, ரயில் வருவதை பார்த்த அந்த நபர் கையில் டார்ச் லைட்டுடன் ஒடி சென்று தண்டவாளத்தில் காரில் உடல்நலக் குறைவால் மயங்கிய நிலையில் இருந்த ஓட்டுநரை வெளியே இழுத்து வந்து காப்பாற்றியுள்ளார்.

அவர் கீழே இறங்கிய அடுத்த நொடியே தண்டவாளத்தில் நின்றிருந்த கார் மீது ரயில் மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் இருந்த நபரை காப்பாற்றும் காட்சி அங்கிருந்த சிசிடிவி காமராவில் பதிவாகியுள்ளது.

1115 total views