மதீனாவில் கோர விபத்து! பரிதாபமாக பலியான 35 யாத்திரிகர்கள்

Report

மதினாவில் இருந்து சுமார் 180 மைல் தொலைவிலுள்ள ஹஸ்ரா சாலையில், நேற்றிரவு 7 மணியளவில் புனித உம்ராஹ் யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று எதிரே வந்த கனரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் தீ பற்றி எரிந்தது.

இதனால், பஸ்ஸில் பயணித்த சுமார் 35 யாத்திரிகர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மற்றவர்கள் அரபு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவார்கள்.

இந்த கோர விபத்தில் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில், காயமடைந்தவர்கள் அல் ஹம்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

.இருப்பினும், இதில் பலியானவர்கள் குறித்த விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

1031 total views