ஆஸ்திரேலியாவில் வெற்றி வாகை சூடும் பெல்ஜியம் அணி!

Report

ஆஸ்திரேலியால் நடந்த அதிவேக சோலார் கார் பந்தயத்தில் முதல் முறையாக பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த Agoria அணி வெற்றி பெற்றுள்ளது.

உலக நாடுகள் பங்கேற்கும் அதிவேக சோலார் கார்ப் பந்தயம் ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் தொடங்கியது. ஒருவாரம் நடைபெற்ற போட்டியில் 40 அணிகள் பங்கேற்றன.

இதில், சோலார் கார் பந்தயத்தின் முன்னணின் அணியான நெதர்லாந்தை சேர்ந்த Vatenfall's அணி இலக்கை எட்டும் தருவாயில் காரில் தீப்பற்றியதால் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

அதன் பின்னர், போட்டியில் முன்னிலை வகித்த பெல்ஜியம் நாட்டின் Agoria அணி 34 மணி 52 நிமிடங்கள் 42 விநாடிகளில் இலக்கை அடைந்து முதல் முறையாக வெற்றிப்பெற்றது.

இரண்டாவது இடத்தை ஜப்பான் நாட்டின் டோகாய் அணியும், மூன்றாவது இடத்தை அமெரிக்காவின் மிச்சிகன் அணியும் பிடித்தன.

896 total views