மரணித்து விட்ட நோயாளி....உயிர் பிழைத்து வீடு திருப்பியது எப்படி? அதிரவைக்கும் பின்னணி!

Report

மரணித்த நோயாளியின் உடல் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தவேளை, அவர் குணமாகி வீடு திரும்பி விட்டார் என உறவினர்களிடம் வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்த சம்பவம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இடம் பெற்றுள்ளது.

மெல்பேர்னின் தென்மேற்கு பகுதியில் கீலொங் பல்கலைகழக மருத்துவமனையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கீலொங்கின் மேற்கு பகுதியில் உள்ள உணவு விடுதியொன்றில் ஜெவ் கொன்வே என்பவர் மயங்கி விழுந்த நிலையில்; மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையின் அவசரசேவை பிரிவினர் உயிரிழந்தவரின் குடும்பத்தவர்கள் உறவினர்களை தொடர்புகொள்ள முயன்றுள்ளனர்.

எனினும் அவர்களால் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து, பொலிஸாரும் இறந்தவரின் உறவினரை தொடர்புகொள்ள முயன்றுள்ளனர் அவர்களின் முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.

இதேவேளை தாங்கள் மருத்துவமனையுடன் தொடர்புகொண்டு குறிப்பிட்ட நபர் குறித்து விசாரித்தவேளை அவர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிவிட்டார் என தெரிவிக்கப்பட்டதாக உணவுவிடுதியின் உரிமையாளரும் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் ,அவர் ஜெவ் கொன்வேயின் சகோதரியை தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து சகோதரி தொடர்ச்சியாக ஜெவ் கொன்வேயை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார் எனினும் அது சாத்தியமாகவில்லை.

இறந்தவரின் குடும்பத்தவர்கள் மருத்துவமனையை சேர்ந்தவர்களை தொடர்புகொண்டு குறிப்பிட்ட நபர் குறித்து விசாரித்துள்ளனர்.

இதற்கு குறிப்பிட்ட நோயாளி கிசிச்சை பெற்று வெளியேறிவிட்டார் என மருத்துவமனையை சேர்ந்தவர்கள் பதிலளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.அவரது தொடர்மாடிக்கு சென்ற பொலிஸார் அங்கும் ஜெவ் கொன்வேயை காணாததால் தொடர் தேடுதலை மேற்கொண்டவேளை, அவரது உடல் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ள மருத்துவமனையின் தலைமை அதிகாரி, முழுமையான விசாரணைகள் இடம்பெறுமென உறுதியளித்துள்ளார்.

8902 total views