குடும்பத்தையே கொன்று காவல் நிலையம் சென்ற நபர்

Report

அமெரிக்கா வாழ் இந்தியர் ஒருவர், தனது குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொன்று, சடலத்துடன் காவல் நிலையத்தில் சரணடைந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

வடக்கு கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ரோஸ்வில்((Roseville)) நகரில் 53 வயதான சங்கர் நாகப்பா ஹாங்காடு என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தியரான இவர் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் தங்கி பல நிறுவனங்களில் தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

அண்மையில், அவரது வீடு அருகேவுள்ள காவல் நிலையத்துக்கு காரில் சென்ற அவர், தனது குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்தார். இதனை நிரூபிக்க காரில் ஒருவரது சடலத்தை எடுத்து வந்துள்ளதாகவும், மீதமுள்ள உடல்கள் தனது வீட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதன்படி அங்கு சென்று போலீசார் ஆய்வு செய்தபோது, இரு சிறுவர்கள் உட்பட 4 பேரின் சடலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது ஹாங்காட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இத்தகவலை தற்போது வெளியிட்டுள்ள காவல் நிலைய அதிகாரி ஜோசுவா சைமன் என்பவர், உயிரிழந்தவர்களின் விவரம், கொலைக்கான காரணத்தையும் கூற மறுத்துவிட்டார். ஆனால் ஹாங்காட் இந்த ஆண்டில் மட்டும் ஒரு கோடியே 27 லட்சத்தை (178,603 அமெரிக்க டாலரை) வருமான வரியாக (Federal tax)செலுத்தியதாக கூறப்படுகிறது.

1550 total views