ஸ்பெயினில் ஆர்ப்பாட்டம் வலுக்கிறது

Report

ஸ்பெயின் நாட்டு கட்டலான் மக்களின் பிரிவினைவாதத் தலைவர் என்று கூறப்படும் ஓரியோல் ஜங்குவெரஸுக்கு நேற்று முன்தினம் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததது.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்பெயினின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

பார்சிலோனாவில் நேற்று முன்தினம் வன்முறை வெடித்தது.

தொடர்ந்து மேலும் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சுதந்திரத்திற்காக மீண்டும் புதிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுவதில் எவ்வித மாற்றமும் இல்லை, அது தவிர்க்கமுடியாத ஒன்று என்று திரு ஓரியோல் சூளுரைத்துள்ளார்.

ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாக மேலும் எட்டுத் தலைவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

“உள்நாட்டில் எழும் பிரச்சினைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் தீர்வுகாண பொதுவாக்கெடுப்பு ஒன்றே சரியான வழி என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

பொதுவாக்கெடுப்பு தவிர்க்க

முடியாத ஒன்று,” என்று தான் சிறையில் இருந்து எழுதிய கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் ஏற்கெனவே 2017ஆம் ஆண்டும் தாம் பொதுவாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்ததற்காக வருத்தப்பட்டதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்குப் பிறகு முதன்முதலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசினார்.

அப்போது அவர், “நீண்ட கால சிறைத்தண்டனை பெற்ற நாங்கள், ஐரோப்பிய மனித உரிமை ஒன்றியத்திடம் மேல்முறையீடு செய்யவிருப்பதாகக் கூறியுள்ளார்.

கட்டலான் சுதந்திர இயக்கத்திற்கு தாங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நாங்கள் ஒருபோதும் எங்கள் கோரிக்கையைக் கைவிட மாட்டோம்.

“தொடர்ந்து போராடுவோம். இந்தச் சிறையும் எங்கள் தனிமையும் மேலும் எங்களை வலுமிக்கவர்களாக்கி ஜனநாயகத்தின் மீது நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கைகளை கூடுமான அளவுக்கு மேலும் வலுப்படுத்தியுள்ளது,” என்றார்.

இந்தச் சிறைத் தண்டனை எங்கள் சுதந்திர இயக்கத்தை ஒருபோதும் வலுவிழக்கச் செய்து விடாது என்றும் அவர் கூறினார்.

கட்–ட–லான் சுதந்–தி–ரப்– போராட்ட இயக்–கம் பல ஆண்–டு–க–ளாக ஸ்பெ–யின் அர–சுக்கு மிகப்பெரிய சவா–லாக இருந்து வரு–கிறது.

891 total views