ஜேக்கப் ஸுமா மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு!!

Report

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது நேற்று நீதிமன்றத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

நேற்று முதன்முதலாக அவரிடம் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

திரு ஸுமா 1990ல் ஐரோப்பா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் இருந்து S$4.71 பில்லியனுக்கு போர் விமானங்களை வாங்கியது மற்றும் சுற்றுக்காவல் படகுகள், ராணுவத் தளவாடங்கள் வாங்கியது ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக 16 ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

அப்போது அவர் துணை அதிபராக பதவி வகித்தார். அப்போது நாட்டின் அதிபராகப் பதவி வகித்த வர் தாபோ இம்பெக்கி.

இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக திரு ஸுமாவின் நிதி ஆலோசகரான சாபிர் ‌ஷேக் என்பவருக்கு 2005ஆம் ஆண்டில் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

ஆனால் ஸுமா 2009ல் அதிபராகப் பதவியேற்றதும் ‌ஷேக் உடல் நிலை பாதிப்பு காரணமாக விடுவிக்கப்பட்டார்.

அதிபராகப் பதவி வகித்தபோது அவர் பதவி விலகக் கோரி ஆளுங்கட்சியான ஆப்பிரிக்கன் தேசிய காங்கிரஸ் கட்சி அவருக்கு நெருக்குதல் கொடுத்ததன் விளைவாக அவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் பதவி விலகினார்.

அதனையடுத்து அவரது ஒன்பதாண்டு கால ஊழல் ஆட்சி முடிவுக்கு வந்தது.

இதுவரையிலும் நீதிமன்றத்திற்கு வராமல் சாக்குப்போக்கு கூறி வந்த நிலையில், நேற்று தென்னாப்பிரிக்காவின் தென்கிழக்கு நகரான பீட்டர்மரிட்ஸ்பர்க்கில் உள்ள உயர்

நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

கடந்த 20 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அந்த வழக்கில் அவர் $4 மில்லியன் லாபம் பெற்றதாக ஸஉமா மீது குற்றம் சாட்டப்பட்டது.

அடுத்த விசாரணையில் ஸுமாவுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் பிரஞ்சு தற்காப்பு நிறுவனமான தேல்ஸ் சார்பில் பேராளர் ஒருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று எதிர்பார்க்கப்

படுகிறது. இருப்பினும் இந்த இருவரும் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை மறுத்து வருகின்றனர்.

823 total views