ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண் - நூலிழையில் உயிர் தப்பியது எப்படி?

Report

அர்ஜென்டினாவில் ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண் பயணி ஒருவர் சக பயணிகளின் சாமர்த்தியத்தால் ரயில் விபத்திலிருந்து உயிர் தப்பினார்.

பியுனாஸ் ஏர்ஸ் பகுதி ரயில் நிலைய நடை மேடையில் பெண் ஒருவர் நடந்து வந்தார். அப்போது, ஓரமாக நின்ற நபர் ஒருவர், திடீரென மயக்கமுற்று அந்த பெண்ணின் மீது நிலை தடுமாறி விழுந்தார்.

தன் மீது விழுந்ததால் நிலை குலைந்த அந்த பெண், கால் தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். அந்நேரம் பார்த்து அவ்வழியே ரயில் வந்ததால் சுதாரித்துக் கொண்ட சக பயணிகள் கைகளை அசைத்தும் சைகைகளை காட்டியும் ரயிலை நிறுத்தி, பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

1188 total views