தகவல் தொடர்பு செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது!

Report

புதிய தகவல்தொடர்பு தொழில்நுட்ப ஆய்வு செயற்கைகோளை, சீனா, வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.

அந்நாட்டின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜி-சாங் செயற்கைக்கோள் ஏவுதல் மையத்தில் இருந்து, லாங் மார்ச்-3B ((Long March-3B)) என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

சீன நேரப்படி நேற்றிரவு 11.21 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்டு, அதற்குரிய சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள், அதிவேக தகவல்தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் என சீன விண்வெளி ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

தகவல்தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை சுமந்து சென்றுள்ள லாங் மார்ச்-3B ராக்கெட், லாங் மார்ச் ராக்கெட் வரிசையில், 315ஆவது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

864 total views