நூற்றாண்டு பழமையான சந்தை 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறப்பு!

Report

சிரியாவின் அலெப்போ நகரத்தில் உள்ள நூற்றாண்டு பழமையான சந்தை, 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

யுனெஸ்கோவின் பாரம்பரிய மிகுந்த நகரங்களின் பட்டியலில் வடக்கு சிரியாவின் அலெப்போ நகரில் உள்ள al-Saqatiyah என்ற சந்தை இடம் பெற்றுள்ளது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இருந்த இந்த சந்தை, போரில் சிதிலமடைந்தது. மேலும், தொடர்ச்சியாக அங்கு போர் பதற்றம் நிலவவே, கடந்த 7 ஆண்டுகளாக அங்குள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன.

அந்த பகுதியில் போர் ஓய்ந்த நிலையில் அண்மையில் இந்த சந்தை மீண்டும் புனரமைக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் அங்கு கடைகள் திறந்த வியாபாரிகள் இறைச்சி, பாதம் மற்றும் உலர் பழங்கள், இனிப்பு வகைகளை விற்க தொடங்கியுள்ளனர்.

1155 total views