காஷ்மீரில் ஆப்பிள் வணிகம் தொடர்பாக புதிய பாதுகாப்பு விதிகள்!

Report

ஆப்பிள் வணிகம் தொடர்பாக ஜம்மு - காஷ்மீருக்கு வரும் வெளிமாநில வியாபாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சோபியான் மாவட்டத்தில் கடந்த வாரம் பஞ்சாபை சேர்ந்த ஆப்பிள் வியாபாரி ஒருவர் உட்பட 3 வெளிமாநிலத்தவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

இதனால், ஆப்பிள் வியாபாரிகளும், லாரி ஓட்டுநர்களும் சரக்கை ஏற்றாமலேயே காஷ்மீரிலிருந்து வெளியேறிய நிலையில், ஆப்பிள் வணிகம் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள் நேரடியாக பழத்தோட்டங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, ஆப்பிள்களை ஏற்றுவதற்காக பாதுகாப்பு அதிகமுள்ள முக்கிய சாலைகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தோட்டங்களிலிருந்து சிறிய ரக வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படும் ஆப்பிள்கள் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்து லாரிகளில் ஏற்றி அனுப்பப்படுகின்றன.

1140 total views