நடுவானில் 120 பயணிகளுடன் வழி மறிக்கப்பட்ட விமானம்!

Report

ஆப்கானிஸ்தானில் உள்ள காபூர் நகருக்கு டெல்லியில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று கடந்த மாதம் 23-ம் தேதி வழக்கம் போல புறப்பட்டு சென்றது.

அப்போது, இந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 120 பயணிகள் பயணம் செய்தனர். ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதும்.

2 பாகிஸ்தான் எப்-16 ரக போர் விமானங்கள் நடுவழியில் மறித்து விமானத்தை தாழ்வான பகுதியில் பறக்கும் படியும், விமானத்தை பற்றியும் விவரங்களை சொல்ல வேண்டும் என கூறினார்.

இதை தொடர்ந்து, ஸ்பைஸ்ஜெட் விமானி இது போர் விமானம் அல்ல, பயணிகள் பயணிக்கும் விமானம் என கூறினார்.

இதை தொடர்ந்து, உறுதிப்படுத்த பாகிஸ்தான் எப்-16 ரக போர் விமானம் ஆப்கானிஸ்தான் வரை இந்த விமானத்தை பின் தொடர்ந்து சென்றது. இதை மத்திய அரசின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

10300 total views