லெபனானில் தொடரும் வன்முறை!

Report

லெபனானில் அரசுக்கு எதிராக இரண்டாவது நாளாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இது குறித்து ஊடகங்கள், லெபனானில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து போராட்டக்காரர்கள் இரண்டாவது நாளாக, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாலைகளை மறித்தல், டயர்களை எரித்தல் போன்ற வன்முறைச் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதன் காரணமாக போராட்டக்காரர்கள் மற்றும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போராட்டம் காரணமாக பல சாலையோரக் கடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடி மற்றும் பிரதமர் சாத் அல் ஹரிரி 2020 ஆம் ஆண்டு பட்ஜெட் விவாதக் கூட்டத்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை போராட்டக்காரர்கள் தொடங்கினர்.

1029 total views