சீன விமானப்படை போர் விமானங்கள் 70 ஆண்டுகள் நிறைவு விழா!

Report

சீன விமானப்படை உருவாக்கப்பட்டதன் 70 ஆம் ஆண்டை கொண்டாடும் வகையில் நடைபெற்ற போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

சீன மக்கள் விடுதலைப்படையின் விமானப்படை உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவுற்றதையடுத்து அதனை நினைவுகூரும் விதமாக கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, ஜிலின் மாகாணத்திலுள்ள சாங்சுன் பகுதியில் சீன விமானப்படையின் 5 நாள் கண்காட்சி தொடங்கியது. இதனை முன்னிட்டு சீன விமானப்படையிலுள்ள பாராசூட் வீரர்கள் மற்றும் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் பாராசூட் வீரர்கள் விமானங்களில் இருந்து குதித்து அந்நாட்டு தேசியக் கொடியை லாவகமாக எடுத்து வந்தனர். இதையடுத்து, சீன விமானப்படையிலுள்ள ஜே-20, ஜே-16 உள்ளிட்ட பல்வேறு ரக போர் விமானங்களும் தங்களது திறனை வெளிப்படுத்தும் வகையில் சாகசத்தில் ஈடுபட்டன.

மேல்நோக்கி செங்குத்தாக பறந்தும், எதிரெதிரே வேகமாக வந்து கடைசி நிமிடத்தில் விலகியும், பல்வேறு நிற புகைகளை கக்கியபடியும் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன.

1065 total views