30 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூகைக்கட்டு வைரஸ் தொற்று அபாயம்!

Report

வேல்ஸில் உள்ள பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்கள் கூகைக்கட்டு (mumps) வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஏறக்குறைய 30 மாணவர்களுக்கு கன்னச்சுரப்பிககள் வீக்க வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேல்ஸ் பொதுச் சுகாதாரத்துறை (PHW ) இந்த வைரஸ் தொற்றினை மிகவும் பாரதூரமாகப் பார்ப்பதுடன் கார்டிஃப் (Cardiff) மற்றும் Cwm Taf பகுதியில் தொடர்ச்சியான விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

மேலும், எம்.எம்.ஆர் தடுப்பூசி (MMR vaccination) பெற்றுக்கொண்டீர்களா என்பதை உறுதிப்படுத்துமாறு பொது மக்களைக்கேட்டுள்ளது.

கார்டிஃப் பல்கலைக்கழகம், கார்டிஃப் மெற்றோ பொலிற்றன் பல்கலைக்கழகம் மற்றும் சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்கும் மாணவர்கள் இந்த வைரஸ் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் 16 ஆம் திகதி வரை 28 பேரிடம் இந்த வைரஸ் அறிகுறிகள் இருந்ததாக வேல்ஸ் பொதுச் சுகாதாரத்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

1384 total views