14 வருட காதலியை கரம்பிடித்த உலகின் மிக முக்கிய பிரபலம்

Report

களிமண் ஆடுகளத்தின் மன்னன், டென்னிஸின் உச்ச வீரர் ரஃபேல் நடால், 14 ஆண்டுகளாக காதலித்த தனது காதலி மரியா பிரான்ஸிஸ்கா பெரெல்லாவை இன்று கரம் பிடித்தார்

இருவரின் திருமணம் ஸ்பெயின் உள்ள மல்லார்கோ தீவில் உள்ள 1628ம் ஆண்டு கட்டப்பட்ட லா போர்டலாசா கோட்டையில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடந்தது.

இந்த திருமணத்தின் அதிகாரப்பூர்வமான புகைப்படங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இவர்களின் திருமணத்துக்கான சமையல் ஸ்பெயின் புகழ்பெற்ற செஃப் மக்கரீனா டி கேஸ்ட்ரோ செய்துள்ளார்.

19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், தனது காதலி பெரெல்லாவோ தனது சகோதரி மரிபெல் மூலம் சந்தித்தார்.

தனது தங்கையின் நெருங்கிய தோழியான பெரல்லாவோ பார்த்த மாத்திரத்தில் நடாலுக்குப் பிடித்துப் போக இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள். ஒரு ஆண்டு இரண்டாண்டு அல்ல, 14 ஆண்டுகளாக இருவரும் காதலித்தார்கள்.

பெரெல்லோ படிப்பு முடிக்கும் வரை காத்திருந்து, வேலைக்கு செல்லும்வரை காத்திருந்து நடால் தற்போது திருமணம் செய்துள்ளார்.

இந்த திருமணத்துக்கு அதிகமான நபர்கள் அழைக்கப்படவில்லை. டென்னிஸ் வட்டாரத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார்கள்.

அதில் கடந்த 1975ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டுவரை ஸ்பெயின் கிங் என அழைக்கப்படும் ஜுவான் கார்லோஸ் அழைக்கப்பட்டு இருந்தார்.

மேலும் டேவிட் பெரர், பெலிசியானோ லோபஸ், நடாலின் நீண்டகால பயிற்சியாளர் அங்கில் டோனி உள்ளிட்டோரும் திருமணத்துக்கு சென்றிருந்தார்கள்.

நடாலின் நண்பர் சுவிட்ஸர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் முக்கிய போட்டி காரணமாக திருமணத்தில் பங்கேற்கவில்லை.

பெரெல்லோவும், நடாலும் கடந்த 14 ஆண்டுகளாக காதலித்தாலும் வெளி இடங்களில் இருவரும் பெரும்பாலும் யார் கண்ணிலும் சிக்கமாட்டார்கள்.

நடால் விளையாடும் டென்னிஸ் போட்டிகளைக் காணவரும் பெரெல்லோ இரகசியமாகச் சந்தித்துவிட்டு செல்வார். ஆனால், நடாலுடன் எந்த நாட்டுக்கும் அவருடன் பயணித்தது இல்லை.

நடாலுக்கு அடுத்தடுத்து போட்டிகள் இருப்பதால், உடனடியாக தேனிலவு குறித்து எந்தவிதமான தி்ட்டமும் இல்லை என்று நடால் தெரிவித்துள்ளார்.

13834 total views