தன்டோரா எனும் புதிய செயலி அறிமுகம்

Report

ரயில் பயண கட்டணம், சரக்கு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய தன்டோரா எனும் புதிய செயலியை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தன்டோரா செயலியை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் வெளியிட்டார்.

இந்த செயலியின் மூலம் இந்திய ரயில்வே சுற்றறிக்கைகள், தெற்கு ரயில்வே சுற்றறிக்கைகள், பணி தொடர்பான ஆலோசனைகள், புத்தாக்கங்கள், விருதுகள், பயணக் கட்டணம், சரக்கு கட்டணம், புகார்களுக்கான தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. கூகுள் ப்ளே தளத்தில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

662 total views