22-வது குழந்தையை வரவேற்க காத்திருக்கும் பிரிட்டனில் மிகப்பெரிய குடும்பம்!

Report

பிரிட்டனில் மிகப்பெரிய குடும்பம் என்ற பெருமையை பெற்றுள்ள தம்பதி தான் சூ மற்றும் நோயல் ராட்போர்ட்.இந்த தம்பதிகளுக்கு 21 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக வலைதளபக்கத்தில் சூ ஒரு பதிவை ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில், தங்களுக்கு பிறக்கவிருக்கும் 22 பிள்ளை வரவேற்க குடும்பமே ஆவலாக காத்து இருப்பதாக அவர்கள் தெரிவித்தார்.

இந்த செய்தியை அவர் மருத்துவமனைக்கு செல்லும் முன் பதிவிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் லங்காஷயர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் அங்குள்ள ஒரு நான்கு மாடி கொண்ட வீட்டில் 10 படுக்கை அறைகளுடன் வசித்து வருகின்றனர். கடந்த 2012-ம் ஆண்டு முதல் முறையாக இந்த தம்பதி தொலைக்காட்சி ஒன்றில் பிரபலமான அப்போது இவர்களுக்கு 15 பிள்ளைகள் இருந்தனர்.

தற்போது, இந்த தம்பதி 22 குழந்தையை வரவேற்க சூ மற்றும் நோயல் ராட்போர்ட் இவர்களின் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகள் காத்திருப்பதாகவும் கூறினர்.

இந்த தம்பதிகள் தனியாக தொழில் செய்து வருவதால் அரசிடம் இருந்து எந்த உதவியும் இவர்கள் பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1881 total views