ஈரானில் நிலநடுக்கம்! 5 பலி 120 பேர் காயம்

Report

ஈரான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள அசெர்பைஜான் மாகாணத்தில் இன்று அதிகாலை 2.20 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த வீடுகள் கட்டிடங்கள் குலுங்கியதோடு சில கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் காரணமாக 5 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 120 பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதேவேளை கடந்த 2003ம் ஆண்டு ஈரான் நாட்டின் பாம் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 26,000 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

934 total views