தலைமுடியை துண்டித்து பெண் மேயரை வீதியில் இழுத்துச்சென்ற கொடூரம்!

Report

பொலிவியாவில் பெண்மேயரின் தலைமுடியை கத்தரித்து அவரது உடலில் வர்ணம்பூசி வீதியால் ஆர்ப்பாட்டக்காரர்கள் இழுத்துசென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அங்கு இடம்பெற்ற தேர்தலின் பின்னர் பொலிவியாவில் மோசமான வன்முறை மூண்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக போராடி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வின்டோ நகரில் பாலமொன்றை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவேளை அவர்களின் இரு ஆதரவாளர்கள் அரச தரப்பினரால் கொல்லப்பட்டுள்ளதாகவும் வதந்திகள் பரவியுள்ளது.

இதனை தொடர்ந்து வின்டோ நகரில் மாநாகரசபையின் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்த கும்பலொன்று மாநகரமேயர் பட்ரீசியா ஆர்சினை வீதியில் இழுத்துச்சென்றதுடன் மாநாகரசபையின் தலைமை அலுவலகத்தை தீயிட்டுக்கொழுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேயர் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகின்றார் என தெரிவித்தே ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை இழுத்துச்சென்று பாலத்தில் நிற்கவைத்து தலைமுடியை துண்டித்ததோடு அவரின் உடல் முழுவதும் பெயின்ட் பூசப்பட்ட நிலையில் படங்கள்வெளியாகியுள்ளன.

இதேவேளை மேயரை ஆர்ப்பாட்டக்காரர்கள் வெறுங்காலுடன் இழுத்துச்சென்ற நிலையில், பொலிஸார் மேயரை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களின் இந்த செயலுக்கு பொலிவியா ஜனாதிபதி இவா மோரலெஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மேயர் தனது கொள்கைகளையும் வறியவர்களின் நலன்களையும் பாதுகாத்தமைக்காக ஈவிரக்கமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொலிவியாவின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவது 24 மணித்தியாலங்களிற்கு ஒத்திவைக்கப்பட்ட தருணம் முதல் அந்த நாட்டில் வன்முறை மூண்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியாவது ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி இவா மொரெலெஸ் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு தற்போதையஜனாதிபதி பத்து வீத வாக்குகளால் வெற்றிபெற்றதாக அறிவிக்கபட்ட நிலையில் அதனை எதிர்கட்சியினர் இதனை ஏற்க மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

5568 total views