பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ள இரண்டு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள்

Report

சோமாலியாவில் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பட்டினியை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிபிடப்பட்டுள்ளது.

அத்துடன் சுகாதாரம், தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் தொடர்பாக, சோமலிய மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சோமாலியாவின் ஒன்பது மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் சர்வதேச நாடுகள் உயிர் காக்கும் உதவிகளை சோமாலியாவிற்கு வழங்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1120 total views