
இந்தோனீசியாவின் வடசுமத்திராவில் காலரா நோய் காரணமாக ஆயிரக்கணக்கான பன்றிகள் மாண்டதாகக் கூறப்படுகிறது.
இறந்த பன்றிகள் வடசுமத்திரா எங்கும் உள்ள ஆறுகளில் வீசப்பட்டுள்ளன. இதன் விளைவாக வடசுமத்திராவில் காலரா நோய் அதிக அளவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.
காலரா நோயை ஏற்படுத்தும் கிருமிகள் ஏறத்தாழ 11 நகரங்களுக்குப் பரவியுள்ளதாக வடசுமத்திரா உணவுப் பாதுகாப்பு, விலங்கு மருத்துவப் பிரிவின் தலைவர் எம். அசார் ஹராஹாப் தெரிவித்தார்.