போர் குற்றம் புரிந்தவருக்கு 30 ஆண்டு சிறை

Report

காங்கோவின் முன்னாள் ராணுவத் தலைவர் போஸ்கோ டாகாண்டாவுக்கு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படவில்லை.

கொலை, பாலியல் வன்கொடுமை, சிறுவர்களை வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்த்துக்கொண்டது ஆகிய குற்றங்களைப் புரிந்ததற்காக டாகாண்டாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

தமக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து டாகாண்டா மேல்முறையீடு செய்துள்ளார்.

டாகாண்டாவின் மேல் அதிகாரியான தாமஸ் லுபாங்காவுக்கு ஏற்கெனவே 14 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1906 total views