83 இலட்சம் ரூபாவிற்கு ஏலம்போன நண்டு!

Report

ஜப்பானில் 83 இலட்சம் ரூபாவிற்கு நண்டு ஒன்று ஏலம் போயுள்ளது.

ஜப்பானில் இப்போது பனிக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் நண்டுகளை ஜப்பானியர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் அந்த நாட்டின் மேற்கு பகுதியில் ஹோன்சூ தீவில், டோட்டோரி நகரில் உள்ள மீன் பிடி துறைமுகத்தில் பனிக்கால நண்டுகள் ஏலம் விடப்பட்டன.

இதில் ஒரு நண்டு 46 ஆயிரம் அமெரிக்க டொலருக்கு (சுமார் 83 இலட்சம்) ஏலம் எடுக்கப்பட்டது.

ஏலம்போன நண்டு 14.6 செ.மீ. நீளமும் 1,240 கிராம் எடையும் கொண்டதாகும்.

இது குறித்து உள்ளூர் அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் எதிர்பார்க்காத விலையில் நண்டு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறதாக கூறியுள்ளார்.

அத்துடன் இந்த நண்டு கடந்த ஆண்டின் சாதனையை முறியடித்து இருக்கிறதாகவும், உலகின் மிக விலையுயர்ந்த நண்டு அதனை தாம் நம்புவதாகவும் கூறிய அவர், கின்னஸ் சான்றிதழ் பெற விண்ணப்பிப்பதை அரசாங்கம் பரிசீலிக்கும் என கூறியுள்ளார்.

6846 total views