இளைஞரின் காதுக்குள் குடியிருந்த 11 கரப்பான் பூச்சிகள்!

Report

சீனாவில் இளைஞர் ஒருவரின் காதுக்குள் 11 கரப்பான் பூச்சிகள் இருந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஹுய்சோ மாவட்டத்தில் 24 வயதான எல்வி வசித்து வருகின்றார் .

அவருக்கு திடீரென ஒருநாள் தனது காதுக்குள் ஏதோ ஊர்ந்து செல்வது போல் இருப்பதாகவும், கடுமையான அரிப்பை உணர்வதாகவும் வீட்டில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில் அவரது வலது புற காதுக்குள் ஒரு பெரிய கரப்பான் பூச்சியும் அதனுடைய 10 குட்டிகளும் ஓடிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர் வைத்தியர்கள்.

இதையடுத்து, நீண்ட நேர சிகிச்சைக்கு பிறகு அவரது காதில் இருந்து 11 கரப்பான் பூச்சிகளையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

எனினும் எல்வியின் காதுக்குள் கரப்பான் பூச்சிகள் எப்படி சென்றன என்பது தெரியவில்லை எனவும் கூறப்படுகின்றது.

1438 total views