மனைவியின் பிறந்தநாளில் சுறாவிற்கு இரையான கணவர்

Report

மனைவியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரீயூனியன் தீவுகளில் நீச்சலடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட எடின்பர்க்கை சேர்ந்த ஒரு நபரை அங்கிருந்த 4 சுறாக்கள், சூழ்ந்துக் கொண்டு அவரை உணவாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எடின்பர்க்கை சேர்ந்த ரிச்சர்ட் மார்ட்டின் டர்னர் என்ற 44 வயது நபர், தன்னுடைய மனைவியின் பிறந்ததினத்தை உயர்ரக ரீயூனியன் தீவுகளில் கொண்டாட முடிவு செய்து, அங்கு சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார்.

துவம்சம் செய்த சுறாக்கள் இந்நிலையில் ரிச்சர்ட்டை அந்த கடலின் 4 சுறாக்கள் ஒரேநேரத்தில் சூழ்ந்து அவரை உணவாக்கிக் கொண்டது அறியப்பட்டது. அதில் ஒரு சுறா, 13 அடி நீளத்தில் இருந்தது.

அங்கிருந்த 13 அடி நீள டைகர் சுறாவின் வயிற்றில் ரிச்சர்ட்டின் முழங்கை உள்ளிட்ட சில பாகங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அவரது விரலில் போட்டிருந்த அவர்களது திருமண மோதிரத்தின் உதவியுடன் அவரது மனைவி அவரது இறப்பை உறுதி செய்துள்ளார்.

மனைவியின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக அந்த தீவிற்கு சென்ற ரிச்சர்ட், சுறாக்களுக்கு இரையானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அவரது உடலின் பாகங்களை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

8987 total views