கராச்சியில் தொல்லை கொடுக்கும் வெட்டுகிளிகள் - பிரியாணி போட சொன்ன அமைச்சர்!

Report

பாகிஸ்தான் கராச்சியில் வெட்டுக்கிளிகள் நிறைய சுற்றி வருவதால் அதை ஒழிக்க அந்நாட்டின் அமைச்சர் ஒருவர் வித்தியாசமான யோசனையை கூறியுள்ளார்.

சமீபத்தில் வெளியான காப்பான் திரைப்படத்தில் வருவது போல பாகிஸ்தான் கராச்சி பகுதியில் கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் சுற்றி வருகின்றன.

அவை உணவகங்கள், வணிக வளாகங்கள் என மக்கள் நடமாடும் அனைத்து இடங்களிலும் படையெடுத்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வெட்டுக்கிளிகள் பலுசிஸ்தான் கடற்கரை பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

எனினும் இந்த வெட்டுக்கிளிகளால் பயிர்களுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் இவை பெரும் தலைவலியாக மாறி வருகின்றன.

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவது குறித்து பேசிய பாகிஸ்தான் அமைச்சர் முகமது இஸ்மாயில் ”பொதுமக்கள் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு வெட்டுக்கிளிகளை பிடித்து பிரியாணி செய்து சாப்பிட வேண்டும். நாம் சாப்பிடுவதற்காகதான் அவை இங்கே வந்துள்ளன” என கூறியிருக்கிறார்.

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை செய்யாமல் இப்படி பிரியாணி போட்டு சாப்பிட சொல்கிறாரே என மக்கள் அவரது பேச்சை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்துவருகின்றனர்.

972 total views