பின்லாந்து கடற்கரையில் காணக்கிடைக்காத அரிய காட்சி!

Report

அரியதொரு வானிலை நிலவிய காரணத்தால், ஆயிரக்கணக்கான முட்டை வடிவ பனிக்கட்டிகள் பின்லாந்தின் கடற்கரையில் காணப்பட்டன.

பின்லாந்துக்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான போத்னியா வளைகுடாவில் உள்ள ஹைலூட்டோ தீவில் காணப்பட்ட இந்த "பனி முட்டைகளை" கண்டவர்களில் புகைப்படக் கலைஞர் ரிஸ்டோ மட்டிலாவும் ஒருவர்.

காற்றாலும், நீராலும் சிறிய பனிக்கட்டி துண்டுகள் உருண்டு செல்லும் அரியதொரு வழிமுறையின்போது இவ்வாறு பனிக்கட்டிகள் வட்டவடிவில் உருவாவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இது போன்று அதற்கு முன்னர் பார்த்ததே இல்லை என்று அருகிலுள்ள ஒலு நகரை சோந்த மாட்டிலா தெரிவித்துள்ளார்.

12532 total views