பங்களாதேசில் நேருக்கு நேர் மோதிய புகையிரதங்கள் - 15 பேர் பலி

Report

பங்களாதேசில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதன் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிட்டங்கொங்கிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த புகையிரதமும் தலைநகர் டாக்காவிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த புகையிரதமும் பிரஹ்மன்பாரியா என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இதன் காரணமாக சிட்டங்கொங்கிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்தின் மூன்று பெட்டிகள் முற்றாக சிதைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது வரை 15 பயணிகளின் உடல்களை மீட்டுள்ள் நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விபத்தில் 40ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பயணிகள் உறக்கத்திலிருந்தவேளையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரிய சத்தமொன்று கேட்டதை அடுத்து பயணிகள் அலறுவதை நான் பார்த்தேன் என ஒரு பயணி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இரு புகையிரதங்களும் ஒரே தண்டவாளத்தில் எப்படி பயணித்தன என்பது தெரியவில்லை எனக்கூறியுள்ள அதிகாரிகள் குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

716 total views