என்னை காப்பாற்றுங்கள்! கதறும் இளம் குடும்பப் பெண்

Report

கணவன் கொலைவெறி தாக்குதலில் ஈடுபடுவதால் தன்னை காப்பாற்றுமாறு இளம்பெண் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் ரத்தம் வடிய கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

அதில் அவர் எனக்கு உடனடியாக உதவி தேவை. எனது பெயர் ஜாஸ்மின் சுல்தானா நான் துபாயில் உள்ள ஷார்ஜ்ஜாவில் வசிக்கிறேன். எனது கணவன் முகம்மது கிஜார் உல்லா. நான் எனது கணவனால் மோசமாக தாக்கப்படுகிறேன். எனக்கு உதவி தேவை என கண்ணீருடன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள குறித்த காணொளியில் முகமெல்லாம் வீங்கிப்போய், கண்களில் இருந்து ரத்தம் வடிந்த படி வெளியிட்டு இருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

14720 total views