சீனா மக்களை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கிய பனிப்பொழிவு!

Report

வடமேற்கு சீனாவின் எமின் கவுண்டி பகுதியில் கடும் பனிப்பொழிவுடன், அதி வேகமாக காற்றும் வீசியதால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனி மூடிய நிலையில், போக்குவரத்து பொலிஸார் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும், போக்குவரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார், ஆங்காங்கே சாலைகளில் சிக்கியிருந்த வாகன ஓட்டிகள் 58 பேரை பத்திரமாக மீட்டனர்.

தொடர்ந்து நிலைமை சீரானதும் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து சீரானது.

133 total views