ஜப்பானில் முதல்முறையாக சர்வதேச ராணுவக் கண்காட்சி!

Report

ஜப்பானில் முதல்முறையாக சர்வதேச ராணுவத் தளவாடங்கள் கண்காட்சி நடைபெற்றது.

அதி நவீன ராணுவ வாகனங்கள், டாங்கிகள் மற்றும் ஆயுதங்கள் ,இதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் ராணுவத் தளவாடங்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. ஏராளமான பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர்.

இதனிடையே, ராணுவக் கண்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அமைதியை வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்டவை உடனடியாகத் தலையிட்டு கண்காட்சியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

300 total views