ரூ.6.20 கோடிக்கு ஏலம் போன 190 ஆண்டுகளுக்கு முந்தைய கையெழுத்து பிரதி!

Report

190 ஆண்டுகளுக்கு முந்தைய, மிகச்சிறிய அளவிலான புத்தகமொன்றை, பாரிஸில் நடந்த ஏலத்தில் லண்டன் அருங்காட்சியகம் மிகப்பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளது.

கிளாசிக் என்று போற்றப்படும் நாவல்களை ஆங்கிலத்தில் எழுதியவர் சார்லட் பிராண்டே. இவர், தன் 14ஆவது வயதில் எழுதிய, மிகச்சிறிய கையெழுத்துப் பிரதியொன்று பாரிஸில் வைக்கப்பட்டிருந்தது.

நேற்று, லண்டன் அருங்காட்சியகம் இதனை 6 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது. வெஸ்ட் யார்க் ஷயரில் உள்ள சார்லட்டின் வீட்டில் இது வைக்கப்படவிருக்கிறது.

718 total views