குளிரூட்டப்பட்ட கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 பேருக்கு மருத்துவ சிகிக்சை!

Report

நெதர்லந்திலிருந்து புறப்பட்ட சரக்குக் கப்பலிலிருந்து பிரிட்டனுக்குள் கள்ளத்தனமாக நுழைய எண்ணிய 25 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் குளிரூட்டப்பட்ட கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பிரிட்டனுக்குச் செல்லவிருந்த அந்தச் சரக்குக் கப்பல் டச்சு துறைமுகத்திற்குத் திரும்பியதாகவும் அவசரச் சேவைப் பிரிவு தெரிவித்தது.

கண்டுபிடிக்கப்பட்ட நபர்களுக்குத் துறைமுகத்திலேயே மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களுள் இருவர், அதிகக் குளிரால் பாதிக்கப்பட்டதன் காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

கடந்த மாதம், லாரி ஒன்றிலிருந்த குளிரூட்டப்பட்ட கொள்கலனிலிருந்து 39 வியட்நாமியர்கள் மாண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

ஐரோப்பாவிற்குள் கள்ளத்தனமாகக் குடியேறும் முயற்சிகளைத் தடுக்க, காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

723 total views