பிரான்ஸ் வீதியில் படுத்துறங்கும் 700 சிறுவர்கள்!

Report

இல்-து-பிரான்சுக்குள் வீடற்ற சிறுவர்கள் 700 பேர் வீதியில் படுத்துறங்குவதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று அரசை எச்சரித்துள்ளது.

manifesto எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இத்தகவலை இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் இரவிலும் இல்-து-பிரான்சுக்குள் பாதுகாப்பற்ற முறையில் 700 சிறுவர்கள் படுத்து உறங்குகின்றனர்.

அவர்களுக்கான சரியான தங்குமிடங்களை அரசு துரிதமாக ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வருடத்தில் மொத்தமாக எட்டு சிறுவர்கள் வீதிகளில் படுத்துறங்குவதால் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seine-Saint-Denis நகரில் உள்ள வீதி ஒன்றில் மார்ச் 25 ஆம் திகதி சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் (நவம்பர் 4 ஆம் திகதி) பரிசில் இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்திருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் போதிய தங்குமிட வசதி இல்லாததால் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சம்பவங்களை மேற்கோள் காட்டி அரசை விழித்துக்கொள்ளுமாறு எச்சரிக்கை ஒன்றை குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.

963 total views